» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் வியாபாரி தீக்குளித்து தற்கொலை முயற்சி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:31:17 PM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் வியாபாரி ஒருவர் திடீரெனத் தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் கோவில் சண்முக விலாச மண்டபம் முன்பு நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரெனத் தன் உடலில் தீவைத்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியினர் உடனடியாகத் தீயை அணைத்து அவரை மீட்டனர்.
உடலில் பலத்த தீக்காயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தீக்குளித்தவர் கோவில்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் (38) என்பது தெரியவந்தது.
இவர் கடந்த ஓராண்டாகத் திருச்செந்தூர் கோவில் வளாகப் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில், அங்குள்ள சிலர் தன்னைத் தாக்கியதால் மனமுடைந்து காணப்பட்ட சுரேஷ், இத்தகைய தீவிர முடிவை எடுத்துத் தற்கொலைக்கு முயன்றதாகக் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இச்சம்பவம் குறித்துத் திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் மனநல பாதிப்பிலிருந்து மீண்ட டெல்லி வாலிபர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:10:40 PM (IST)

தவெக அரசின் பட்ஜெட் கானல் நீர் போன்றது: சட்டமன்றத்தில் மார்க்கண்டேயன் விமர்சனம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:18:42 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் ஸ்ரீ துர்க்கை அம்பிகைக்கு 55-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:12:51 PM (IST)

கலை விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:49:28 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:23:03 PM (IST)

கோவில்பட்டியில் உலக தாய்ப்பால் வார விழா: தாய்மார்கள் உறுதியேற்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:11:07 PM (IST)








