» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவில் ஸ்ரீ துர்க்கை அம்பிகைக்கு 55-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:12:51 PM (IST)

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ துர்க்கை அம்பிகைக்கு, 55-ஆம் ஆண்டு விழா மற்றும் வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ ஜலதுர்க்கா வார வழிபாட்டு டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற இவ்விழாவை முன்னிட்டு ஸ்ரீ துர்க்கை அம்பிகைக்கு ஊஞ்சல் உற்சவமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. இன்று காலை விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கும்ப பூஜை மற்றும் துர்க்கா ஜெபம் ஆகியவை நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ துர்க்கை அம்பிகைக்கு 51 வகையான சிறப்பு அபிஷேகங்களும், கும்பாபிஷேகமும் வெகுவிமர்சையாக நடத்தப்பட்டன.
பின்னர் அம்பிகைக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இச்சிவாச்சாரியப் பூஜைகளைத் திருக்கோவில் பிரதான பட்டர் செல்வம் தலைமையில் அர்ச்சகர்கள் நடத்தி வைத்தனர். பூஜைகளின் நிறைவாகக் கோவிலுக்கு வருகை தந்த பெண் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் மற்றும் மஞ்சள் கயிறு உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்குப் பிரம்மாண்ட மகா அன்னதானமும் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ஜலதுர்க்கா வார வழிபாட்டு டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் ஜெயராணி, தமிழக வெற்றிக் கழக மாநிலத் துணைச் செயலாளர் சுமத்ரா, தொழிலதிபர் ஏ.கே.ஆர். முருகன், நடராஜன், வன்னியராஜ், செந்தில்குமார், ஓம்சக்தி பிரபு, கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளைத் தரிசனம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் மனநல பாதிப்பிலிருந்து மீண்ட டெல்லி வாலிபர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:10:40 PM (IST)

தவெக அரசின் பட்ஜெட் கானல் நீர் போன்றது: சட்டமன்றத்தில் மார்க்கண்டேயன் விமர்சனம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:18:42 PM (IST)

கலை விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:49:28 PM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் வியாபாரி தீக்குளித்து தற்கொலை முயற்சி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:31:17 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:23:03 PM (IST)

கோவில்பட்டியில் உலக தாய்ப்பால் வார விழா: தாய்மார்கள் உறுதியேற்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:11:07 PM (IST)








