» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் மனநல பாதிப்பிலிருந்து மீண்ட டெல்லி வாலிபர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:10:40 PM (IST)



நாசரேத்தில் மனநல பாதிப்பிலிருந்து மீண்ட டெல்லி வாலிபர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கடந்த 2022 செப்.9ம் தேதி சுமார் 35 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் திருசெந்தூர் பகுதியில் சுற்றித்திரிந்தார். அவரை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முன்னிலையில் மீட்டு நாசரேத் குட் சமாரிட்டன் சாரிடபிள் டிரஸ்ட் மனநல காப்பகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து காப்பக ஊழியர்களின் கவனிப்பால் உடல்நலம் முன்னேறி மனத்தெளிவு பெற்றார். மனநல மருத்துவர் பரிசோதனையின்போது அவரது சொந்த மாநிலம், ஊர் பற்றிய விவரங்களை கூறினார். அவர் டெல்லி  மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனை அடிப்படையாக வைத்து அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டபோது, அவரின் முகவரி கண்டறியப்பட்டது. 

பின்னர் அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் வீடியோ காலில் தொடர்பு கொண்டு மகனை  நலம் விசாரித்தனர். அவரது குடும்பத்துடன் மீண்டும் இணைத்து வைக்கும் வகையில், தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் மாவட்ட கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் முன்னிலையில், அந்த நபர் அவரது சொந்த ஊருக்கு குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்டு சிகிச்சை அளித்து அவரது குடும்பத்தினருடன் இணைத்து வைக்க பணியாற்றிய இல்ல நிர்வாகி கிளாட்வின் ஜோசப், மனநல மருத்துவர் வெங்கடேஷ் பெருமாள், சமூக பணியாளர் மார்ட்டின் மற்றும் அனைத்து அலுவலர்களையும் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory