» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பிரபல ஸ்வீட் ஸ்டாலில் ஆடித் தள்ளுபடியில் அல்வா!

வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 11:12:09 AM (IST)



தூத்துக்குடியில், பிரபல தனியார் ஸ்வீட் ஸ்டாலில் ஆடி மாதத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடியில் அல்வா விற்கப்படுகிறது.

தூத்துக்குடி சிவன் கோவில் தேரடியில் பிரபல பொதிகை ஸ்வீட்ஸ் நிறுவனம் இயங்கிவருகிறது. தூத்துக்குடி மக்களின் பேரன்பைப் பெற்ற பொதிகை ஸ்வீட்சில் தற்போது வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) ஆடி சிறப்பு ஆஃபர் வழங்கி வருகின்றனர். வாடிக்கையாளர்கள் வாங்கும் அல்வாக்களுக்கு அதே எடையுள்ள அல்வா வழங்கிவருகின்றனர். 

தூத்துக்குடியில் இதனையறிந்த வாடிக்கையாளர்கள் அல்வா வாங்க குவிந்து வருகின்றனர். இது குறித்து பொதிகை ஸ்வீட்ஸ் பங்குதாரர் வழக்கறிஞர் ஜோதி நெல்லைக்குமார் கூறுகையில், தூத்துக்குடியில் 60 வருட பாரம்பரியம் கொண்ட எங்கள் நிறுவனம் தரத்துடன் பல்வேறு வகையான இனிப்புகள் மற்றும் காரவகைகளை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறோம்.

எங்கள் நிறுவனத்தின் நிறுவனர் ஐயா.கலியுக வரதன் கருப்பசாமி அவர்கள் எங்களுக்கு அளித்த தாரக மந்திரத்தின் அடிப்படையில் தரம், சுவை, புதுமையுடன் வழங்கிவருகிறோம். தற்போது ஆடி மாதம் மற்றும் பனிமய மாதா திருவிழாவை முன்னிட்டு எங்களிடம் ஸ்வீட் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு "நெய் அல்வா" 100 கி, 250 கி, 500 கிராம் வாங்கினால் அதே அளவு தள்ளுபடியாக வழங்கப்படுகிறது என்றார்.


மக்கள் கருத்து

ராம்Aug 7, 2026 - 10:10:43 PM | Posted IP 172.7*****

தூத்துக்குடியில் ஸ்வீட்டு வாங்க உருப்படியான கடை.

தலைப்புAug 7, 2026 - 11:39:46 AM | Posted IP 172.7*****

கடையின் பெயர் "பிரபல ஸ்வீட் ஸ்டால்" ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory