» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கட்டுமானப் பணியில் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் பலி - தூத்துக்குடியில் பரிதாபம்!

வியாழன் 6, ஆகஸ்ட் 2026 11:12:42 AM (IST)

தூத்துக்குடியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் 3-வது மாடியில் வேலையில் ஈடுபட்டிருந்தபோது தவறி கீழே விழுந்த கொத்தனார், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி செல்சினி காலனியைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம் மகன் சிவா (35). கொத்தனாரான இவர், நேற்று தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் 2-வது தெருவில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். வீட்டின் 3-வது மாடியில் சாரம் அமைத்து கொத்த வேலை செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகச் சிவா கால்தவறி கீழே விழுந்தார். 

இதில் அவருக்குத் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவரை அக்கம் பக்கத்தினர் மற்றும் சக தொழிலாளர்கள் உடனடியாக மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துதென்பாகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory