» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒரே நாளில் இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை : தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!

செவ்வாய் 28, ஜூலை 2026 12:44:18 PM (IST)

tutGHpressi.jpg

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முடநீக்கியல் துறை சார்பில், ஒரே நாளில் இருவருக்கு அதிநவீன உபகரணங்களுடன் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முடநீக்கியல் துறையில் எலும்பு முறிவு மற்றும் எலும்பு நோய் பிரச்சனைகளுக்குச் சிறந்த முறையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 421 பேருக்கு வெற்றிகரமாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பலட்சுமி (54) மற்றும் சோலையப்பன் (74) ஆகிய இருவருக்கும் வயது மூப்பின் காரணமாக மூட்டு தேய்மானம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலை இருந்தது. பல்வேறு ஆய்வுச் சிகிச்சைகளுக்குப் பிறகு, முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இருவருக்கும் இடது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஒரே நாளில் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டது.

இச்சிகிச்சையைச் சிறப்பாகச் செய்து முடித்த முடநீக்கியல் துறைத் தலைவர் எல். பாவலன், மயக்கவியல் துறைத் தலைவர் பலராமன் தலைமையில் மருத்துவர்கள் ஈஸ்வர பாண்டி, கந்தசாமி, ஜேம்ஸ் சுந்தர் சிங், விஜய சொரூபன், விஷ்ணு ராஜா மற்றும் உதவி மருத்துவர்கள், பிளாஸ்டர் டெக்னீசியன்கள், செவிலியர்களுக்குக் கல்லூரி நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும், உதவிக்கு உறுதுணையாக இருந்த கல்லூரி முதல்வர் எபினேசர் ஜோயல் குமார், மருத்துவக் கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முடநீக்கியல் வெளிநோயாளிகள் பிரிவை அணுகி, இச்சிகிச்சை முறைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory