» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பக்கிள் ஓடையில் ஆண் சடலம் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:30:16 PM (IST)
தூத்துக்குடி எஃப்.சி.ஐ ரவுண்டானா அருகே பக்கிள் ஓடையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி எஃப்.சி.ஐ ரவுண்டானா ஆவின் பால் விற்பனையகம் அருகில் உள்ள பக்கிள் ஓடையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாகத் தெற்கு காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஓடையில் கிடந்த சடலத்தை மீட்டு ஆய்வு செய்தனர்.
முதற்கட்ட ஆய்வில் அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. விசாரணையில், உயிரிழந்தவர் தூத்துக்குடி ராஜகோபால் நகர் 4-வது தெருவைச் சேர்ந்த சுடலையாண்டி மகன் முருகானந்த் (60) என்பது கண்டறியப்பட்டது. இவருக்கு ரெங்கமணி என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இதையடுத்து, அவரது உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்துத் தெற்கு காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒரே நாளில் இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை : தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:44:18 PM (IST)

பைக் மீது டிப்பர் லாரி மோதி விபத்து கொத்தனார் பரிதாப பலி!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:23:45 PM (IST)

தெரு வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:15:25 PM (IST)

மேல்மாந்தை கல்லூரியில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:05:54 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணியிடங்கள் : விண்ணப்பிக்க ஆகஸ்ட் 3 கடைசி நாள்!
செவ்வாய் 28, ஜூலை 2026 11:52:45 AM (IST)

பூப்பந்தாட்டப் போட்டியில் ஹோலிகிராஸ் பள்ளி மாணவிகள் முதலிடம்: மாவட்ட போட்டிக்குத் தகுதி!
செவ்வாய் 28, ஜூலை 2026 11:32:54 AM (IST)








