» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பூப்பந்தாட்டப் போட்டியில் ஹோலிகிராஸ் பள்ளி மாணவிகள் முதலிடம்: மாவட்ட போட்டிக்குத் தகுதி!

செவ்வாய் 28, ஜூலை 2026 11:32:54 AM (IST)

HolyCrossAnglo.jpg

தூத்துக்குடி நகர்புறக் கல்வி வட்டாரப் பூப்பந்தாட்டப் போட்டியில் ஹோலிகிராஸ் பள்ளி மாணவிகள் அனைத்துப் பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து மாவட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். 

தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் நகர்புறக் கல்வி வட்டார அளவிலான பூப்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் தூத்துக்குடி ஹோலிகிராஸ் பள்ளி அணிகள் பங்கேற்றுச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின.

14 வயதுக்குட்பட்டோர் ஜூனியர் பிரிவில் APC வீரபாகு பள்ளியையும், 17  வயதுக்குட்பட்டோர் சீனியர் பிரிவில் செயின்ட் தாமஸ் பள்ளியையும் மற்றும்  19 வயதுக்குட்பட்டோர் சூப்பர் சீனியர் பிரிவில் சுப்பையா வித்யாலயம் பள்ளியையும் வென்று மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வு பெற்றனர்.

மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து, தூத்துக்குடி மாவட்ட அளவிலான பூப்பந்தாட்டப் போட்டிகளுக்குத் தகுதி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த ஹோலிகிராஸ் பள்ளி மாணவிகளைப் பள்ளித் தலைமையாசிரியர், உடற்பயிற்சி ஆசிரியைகள் சோபியா, சுஜி, பயிற்சியாளர் பாலசிங் மற்றும் பெற்றோர்கள் நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இப்போட்டிக்கான சிறப்பான ஏற்பாடுகளைச் செயின்ட் தாமஸ் பள்ளி நிர்வாகமும், பொறுப்பாளர் குப்புசாமியும் செய்திருந்தனர். மேலும், போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளைத் தூத்துக்குடி மாவட்டப் பூப்பந்தாட்டக் கழகச் செயலாளர் கண்ணன் நேரில் பாராட்டி ஊக்கப்படுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory