» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மேல்மாந்தை கல்லூரியில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு!

செவ்வாய் 28, ஜூலை 2026 12:05:54 PM (IST)



மேல்மாந்தை ஸ்ரீ பெத்தநாச்சி அம்மன் சமுதாயக் கல்லூரியில் மறைந்த முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 11-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

கல்லூரி இயக்குநர் கோடீஸ்வரன் வழிகாட்டுதலின்படி, கல்லூரி முதல்வர் ஆனந்த ரூபா தலைமையில், பேராசிரியைகளின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், கல்லூரி மாணவிகள் டாக்டர் அப்துல் கலாமின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரின் நினைவைப் போற்றும் வகையில் கல்லூரி வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், அவரது உயரிய சிந்தனைகள், ஒழுக்கம், கல்வி சிந்தனை மற்றும் இலட்சியங்களைப் பின்பற்றிச் சமுதாயத்திற்குப் பயனுள்ள வகையில் வாழ்வதற்கான உறுதிமொழியையும் மாணவிகள் ஏற்றுக்கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory