» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தெரு வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!

செவ்வாய் 28, ஜூலை 2026 12:15:25 PM (IST)

AitucArpattam.jpg

தெரு வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்புச் சட்டத்தை முறையான முறையில் அமல்படுத்தாத உள்ளாட்சி ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஏஐடியூசி தெரு வியாபாரிகள் சார்பில் தூத்துக்குடியில் மாநில தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் 2014-ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் சட்டம் கொண்டு வரப்பட்டு, தமிழ்நாட்டில் 2015-ஆம் ஆண்டு விதிகள் அமலுக்கு வந்தன. இதன்படி அனைத்து வியாபாரத் தளங்களிலும் கணக்கெடுப்பு நடத்தி, தெரு வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் வியாபாரச் சான்று வழங்கப்பட வேண்டும். ஆனால் பல உள்ளாட்சி அமைப்புகளில் இச்சட்டம் இதுவரை சரிவர அமல்படுத்தப்படவில்லை. 

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி 6 மாதத்திற்குள் இச்சட்டத்தை அமல்படுத்தாத உள்ளாட்சி ஆணையர்கள் மீது உள்ளாட்சி இயக்குநர் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி மட்டக்கடை பேருந்து நிறுத்தம் அருகில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொது தொழிலாளர் சங்கச் செயலாளர் தனலட்சுமி, தலைவர் பொன்னுசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். 

ஏஐடியூசி மாவட்டப் பொதுச் செயலாளர் லோகநாதன், மாவட்டத் தலைவர்  கிருஷ்ணராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தெரு வியாபார தொழிலாளர் சங்கம் ஜோசப், பால்பாண்டியன், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் கரும்பன், ஏஐடியூசி மாவட்டப் பொருளாளர் பாலசிங்கம், சட்ட ஆலோசகர் கண்ணம்மாள் உள்பட திரளானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory