» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது டிப்பர் லாரி மோதி விபத்து கொத்தனார் பரிதாப பலி!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:23:45 PM (IST)
ஸ்ரீவைகுண்டம் அருகே இன்று காலை வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, பைக் மீது எதிரே வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் கொத்தனார் சம்பவ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இசவன்குளம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முருகன் (42). கொத்தனார் வேலை செய்து வந்த இவர், இன்று காலையில் வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்காகச் சென்று கொண்டிருந்தார்.
அந்நியாபரநல்லூர் - மீனாட்சிபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இவ்விபத்தில் தூக்கி வீசப்பட்ட முருகனின் தலை மீது டிப்பர் லாரியின் டயர் ஏறி இறங்கியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒரே நாளில் இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை : தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:44:18 PM (IST)

தூத்துக்குடி பக்கிள் ஓடையில் ஆண் சடலம் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:30:16 PM (IST)

தெரு வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:15:25 PM (IST)

மேல்மாந்தை கல்லூரியில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:05:54 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணியிடங்கள் : விண்ணப்பிக்க ஆகஸ்ட் 3 கடைசி நாள்!
செவ்வாய் 28, ஜூலை 2026 11:52:45 AM (IST)

பூப்பந்தாட்டப் போட்டியில் ஹோலிகிராஸ் பள்ளி மாணவிகள் முதலிடம்: மாவட்ட போட்டிக்குத் தகுதி!
செவ்வாய் 28, ஜூலை 2026 11:32:54 AM (IST)








