» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாடு நாள் வாழ்த்து: மாநில உரிமைகளைக் காக்கக் கனிமொழி எம்பி அழைப்பு!
சனி 18, ஜூலை 2026 11:57:59 AM (IST)

பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய இந்நாளில், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உறுதியை அனைவரும் ஏற்க வேண்டும் என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நாளை முன்னிட்டுத் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தனது எக்ஸ் (X) சமூக ஊடகப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பல்வேறு போராட்டங்கள் மற்றும் உயிர்த்தியாகங்களுக்குப் பிறகு அன்னைத் தமிழ் நிலத்திற்குத் 'தமிழ்நாடு' என்ற பெயர் மீட்டளிக்கப்பட்டதாக அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சியமைத்த போது பெற்ற அதிகாரத்தின் மூலமாகவே, இத்துணைக் கண்டத்தின் வரலாற்றை முழங்கும் இனமானச் சொல்லாகத் 'தமிழ்நாடு' என்ற பெயர் நிலைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணா முறைப்படி தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய இந்நாளில், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உறுதியை அனைவரும் ஏற்க வேண்டும் எனவும், தமிழ்நாடு எனும் தனிப்பெரும் அடையாளத்தை உலகளவில் நிலைநிறுத்த வேண்டும் எனவும் தனது பதிவில் கனிமொழி கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒரே நாளில் இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை : தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:44:18 PM (IST)

தூத்துக்குடி பக்கிள் ஓடையில் ஆண் சடலம் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:30:16 PM (IST)

பைக் மீது டிப்பர் லாரி மோதி விபத்து கொத்தனார் பரிதாப பலி!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:23:45 PM (IST)

தெரு வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:15:25 PM (IST)

மேல்மாந்தை கல்லூரியில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 12:05:54 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணியிடங்கள் : விண்ணப்பிக்க ஆகஸ்ட் 3 கடைசி நாள்!
செவ்வாய் 28, ஜூலை 2026 11:52:45 AM (IST)








