» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இருசக்கர வாகன விபத்து: முதியவர் உயிரிழப்பு!

சனி 18, ஜூலை 2026 11:49:57 AM (IST)

காடல்குடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி விழுந்து காயமடைந்த முதியவர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் காடல்குடி போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் செண்பகம் மகன் நாகப்பாண்டி (68). இவர் கடந்த 5ஆம் தேதி தனது டிவிஎஸ் எக்ஸ்எல் மோட்டார் சைக்கிளில் காடல்குடியில் இருந்து விளாத்திகுளம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். 

இவ்விபத்தில் பலத்த காயமடைந்த நாகப்பாண்டியை அருகில் இருந்த பொது மக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காடல்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory