» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாடு கடல்சார் பயிற்சி கழகத்தில் ஆட்சியர் விஷூ மகாஜன் ஆய்வு!

சனி 18, ஜூலை 2026 11:03:19 AM (IST)

Marineacadem.jpg

தூத்துக்குடி கடற்கரைச் சாலை பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு கடல்சார் பயிற்சி கழகத்தில் மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று (18.07.2026) தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கடற்கரை சாலை பகுதியில் உள்ள தமிழ்நாடு கடல்சார் பயிற்சி கழகம், ஐ.சி.ஏ.ஆர் - மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கடற்கரை சாலை பகுதியில் உள்ள தமிழ்நாடு கடல்சார் பயிற்சி கழகத்தில் 6 மாத பொதுமுறை மாலுமி பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் (உண்டு உறைவிட கழகம்) பயிற்சிகள் குறித்தும், ஐ.சி.ஏ.ஆர் - மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வகத்தில் முத்துச்சிப்பி, கணவாய், ஆக்கு, சங்கு, தாவர மிதவை உயிர்கள், சூழலியல் நச்சுயியல், கடல் சார் உயிரினங்களின் கண்காட்சி, மீன் உயிரியல் போன்ற பல்வேறு கடல் சார் உயிர் ஆய்வகத்தின் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன். ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சிந்தனை சிறகுகள் திட்டத்தின் கீழ் செயற்கை நுண்ணறிவு பயிற்சி (AI) அனைத்து துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் புஷ்ரா ஷப்னம், ஐ.சி.ஏ.ஆர் - மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி லவ் ஸன், தமிழ்நாடு கடல்சார் பயிற்சி கழகம் முதல்வர் எர்ணஸ்ட் விமல் பெர்ணான்டோ ஆகியோர் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory