» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 7 குடும்பங்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள்: மேயர் வழங்கினார்!

சனி 18, ஜூலை 2026 10:11:15 AM (IST)

MayorFire1t.jpg

தூத்துக்குடியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 7 குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்களை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.

தூத்துக்குடி மாநகராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட திருவள்ளுவர்புரம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு வீடுகள் முழுவதும் எரிந்து சேதமடைந்தன. இதனால் வீட்டிலிருந்த துணிகள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் நாசமாகின.

உடைமைகளை இழந்து தவித்த 7 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் வாழ்வாதாரப் பாதிப்புகள் குறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை நேரில் சந்தித்து முறையிட்டு, உதவி கோரினர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற மேயர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

அதன்பொருட்டு, பாதிக்கப்பட்ட ஏழு குடும்பங்களுக்கும் தலா ஒரு வீட்டிற்குத் தேவையான பீரோ, கட்டில், சீலிங் ஃபேன், கேஸ் அடுப்பு மற்றும் தண்ணீர்த் தொட்டி உள்ளிட்ட 5 லட்ச ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்களை மேயர் ஜெகன் பெரியசாமி தனது சொந்தச் செலவில் பாதிக்கப்பட்ட நபர்களிடம் நேரில் வழங்கினார்.

இந்நிகழ்வில் மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், லூர்தம்மாள்புரம் பங்குத்தந்தை செல்வன், மாநகர மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜெனிபர் ராபர்ட், பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் எமல்டன், வட்டப்பிரதிநிதி கிளமெண்ட், நிர்வாகிகள் வேணி சந்தானம், தெய்வேந்திரன், அருள்ராஜ், தினேஷ், ஸ்நோசன், ஜெஸ்வந்த், கோகுல், சந்தனகுமார், ஜெப்சன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

MANITHANJul 18, 2026 - 10:37:38 AM | Posted IP 104.2*****

SUPER ஜெகன் BRO

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory