» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கே.ஆர்.கல்லூரியில் பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவிகள் உறுதிமொழி!

புதன் 15, ஜூலை 2026 5:53:24 PM (IST)

KRawareJL15.jpg

கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்ட மகளிர் அதிகாரம் மையம் மற்றும் சமூக நலன், மகளிர் உரிமைத் துறை சார்பாக, நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மதிவண்ணன் தலைமை வகித்தார். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்சி கலந்துகொண்டு பெண்கள் பாதுகாப்பு, இணையவழி குற்றத் தடுப்பு, சமூக ஊடகப் பயன்பாட்டு வழிமுறைகள் குறித்து விளக்கினார். 

மேலும் அவசரகால உதவிகளுக்கான காவல்துறை உதவி எண் 1091 குறித்தும் எடுத்துரைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு வழக்கறிஞர் சோலையப்பன் பெண்களின் சட்ட உரிமைகள், பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் இலவச சட்ட உதவிகளைப் பெறும் நடைமுறைகள் குறித்து விவரித்தார்.

மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் க.க. நிவேதிதா, குழந்தைத் திருமணத் தடுப்பு, பாலின சமத்துவம், கல்வி நிறுவனங்களில் பாலியல் தொந்தரவு தடுப்பு மற்றும் அரசின் மகளிர் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி பொண்ணு மாரி, மையத்தின் செயல்பாடுகள் மற்றும் மகளிர் உதவி எண் 181 இன் பயன்பாடு குறித்து விளக்கமளித்தார்.

நிகழ்ச்சியின் முக்கியப் பகுதியாக, குழந்தைத் திருமணத்திற்கு எதிரான உறுதிமொழியைக் கல்லூரி மாணவிகள் ஏற்றுக்கொண்டனர். மேலும், "பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்" என்ற தலைப்பில் சுவரொட்டி மற்றும் மௌன நாடகப் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவிகளின் சமூக விழிப்புணர்வுக் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டன. 

இந்நிகழ்வில் நிதி கல்வியறிவு வல்லுநர் ஜெயலட்சுமி, பாலின நிபுணர் முருகப்பெருமாள், கல்லூரி ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory