» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூரில் அண்ணாமலையின் வீ த லீடர்ஸ் மாநாடு ரத்து: தூத்துக்குடியில் நடத்தத் திட்டம்!
புதன் 15, ஜூலை 2026 4:18:19 PM (IST)

திருச்செந்தூரில் ஜூலை 26-ஆம் தேதி நடைபெற இருந்த 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் இரண்டாவது மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவரும் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான அண்ணாமலை, கட்சியிலிருந்து விலகி 'வீ த லீடர்ஸ்' என்ற இயக்கத்தை நிறுவினார். இந்த இயக்க உறுப்பினர்களை அரசியல் மயப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதன் முதல் மாநாடு ஜூலை 12-ஆம் தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 'போதையில்லா தமிழகம்' என்ற பெயரில் விழிப்புணர்வு மாநாடாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, அமைப்பின் இரண்டாவது மாநாடு ஜூலை 26-ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திருச்செந்தூரில் திட்டமிடப்பட்டிருந்த மாநாடு ரத்து செய்யப்படுவதாக 'வீ த லீடர்ஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது. இம்மாநாட்டுக்கு மாற்றாகச் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி, இயற்கை மற்றும் சுற்றுப்புற விழிப்புணர்வு சார்ந்த சமூகநல நிகழ்வு ஆகஸ்ட் மாதத்தில் தூத்துக்குடியில் நடத்தப்பட உள்ளது.
இந்தச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வு தட்டையான மாநாடாக இல்லாமல் சமூகநலப் பங்களிப்பாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு நடக்கும் தேதி மற்றும் இடம் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என அமைப்பின் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தருவை மைதானத்தில் கட்டணமில்லா பயிற்சி : அமைச்சர் அத்வ் அர்ஜுனாவிடம் கோரிக்கை
புதன் 15, ஜூலை 2026 5:06:21 PM (IST)

மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது : தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. பேட்டி!
புதன் 15, ஜூலை 2026 4:44:13 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
புதன் 15, ஜூலை 2026 3:54:22 PM (IST)

மாணவர்களுக்கு உதவ டிஎம்பி அறக்கட்டளை தயார் : தலைமை செயல் அதிகாரி உறுதி!
புதன் 15, ஜூலை 2026 3:40:49 PM (IST)

தமிழ் பாப்திஸ்து துவக்க பள்ளியில் கல்வி வளர்ச்சி தின விழா
புதன் 15, ஜூலை 2026 3:16:29 PM (IST)

புன்னக்காயலில் ரூ.32 கோடி மீன் ஏலக்கூடம் உள்ளிட்ட அரசு திட்டங்கள் : ஆட்சியர் ஆய்வு!
புதன் 15, ஜூலை 2026 12:37:42 PM (IST)








