» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாணவர்களுக்கு உதவ டிஎம்பி அறக்கட்டளை தயார் : தலைமை செயல் அதிகாரி உறுதி!

புதன் 15, ஜூலை 2026 3:40:49 PM (IST)

tmbArakatt.jpg

கல்வி கற்பதற்கு மாணவர்கள் தயாராக இருந்தால், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய டிஎம்பி அறக்கட்டளை தயாராக உள்ளதாக தலைமை செயல் அதிகாரி எம். முத்தையா உறுதி அளித்தார். 

தூத்துக்குடியில் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை மற்றும் டிஎம்பி அறக்கட்டளை சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் 20 பள்ளிகளைச் சேர்ந்த பெற்றோரை இழந்த மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 350 மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பள்ளிச் சீருடைகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இவ்விழா நடைபெற்றது. விழாவிற்கு மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை நிறுவனர் பி. ஜாய்சன் தலைமை தாங்கினார். பொருளாளர் மு. விக்னேஷ் வரவேற்புரையாற்றினார். பள்ளித் தலைமையாசிரியை விபாஸ்ரீ முன்னிலை வகித்தார்.

விழாவில் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன், மாணவர்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். 

டிஎம்பி அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி எம். முத்தையா பேசுகையில், கல்வி கற்பதற்கு மாணவர்கள் தயாராக இருந்தால், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தங்களது அறக்கட்டளை தயாராக உள்ளதாக உறுதி அளித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ப. அனுசியா, மாணவர்கள் கல்வியுடன் சேர்த்து தங்களது தனித்திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, ஏற்கனவே இந்த அறக்கட்டளை மூலம் பயனடைந்த மாணவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். விழாவின் நிறைவாக அறக்கட்டளை டிரஸ்டி அசோக்குமார் நன்றியுரை ஆற்றினார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.

மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை கடந்த 5 வருடங்களாக இக்கல்வி உதவி மட்டுமின்றி, இரத்ததானம், மரம் நடுதல், ஆதரவற்றோரை மீட்டல், மனநலக் காப்பகங்களுக்கு உதவுதல் மற்றும் பேரிடர் காலப் பணிகள் போன்ற பல்வேறு சமூக நலப் பணிகளைச் செய்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 2024-ஆம் ஆண்டில் 210 மாணவர்களுக்கும், 2025-ஆம் ஆண்டில் 246 மாணவர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory