» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது : தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. பேட்டி!
புதன் 15, ஜூலை 2026 4:44:13 PM (IST)
மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கக் கூடாது என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாக உள்ளது எனத் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி கருணாநிதி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மொழிக் கொள்கை மற்றும் மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் இருமொழி கொள்கையில்தான் தெளிவாக உள்ளது எனக் குறிப்பிட்ட அவர், மொழிக் கொள்கையானது குழந்தைகள் மீது பாரமாக மாறிவிடக் கூடாது என்றார்.
பல மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ள மாணவ மாணவிகளுக்கு இன்றைய உலகில் அதற்கான அனைத்து வாய்ப்புகளும் வழிகளும் உள்ளன என்றும், ஆனால் பாடத்திட்டத்தோடு சேர்த்து மொழியைக் குழந்தைகள் மீது சுமையாகச் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு மும்மொழி கொள்கையை அமல்படுத்த அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், மும்மொழி கொள்கையைக் கட்டாயம் என்று வலியுறுத்திக் குழந்தைகள் மத்தியில் அவநம்பிக்கையை உருவாக்கக் கூடாது என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு என்றார். இத்தகைய திணிப்பு குழந்தைகளுக்குக் கற்றலில் மனச்சோர்வை அளிக்கும் வகையில் அமைந்துவிடும் என்றும் எச்சரித்தார்.
தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் அணுகுமுறை குறித்துப் பேசுகையில், த.வெ.க.வினர் ஒன்றிய அரசாங்கத்தை எதிர்த்துப் பேசக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளனர் எனக் குறிப்பிட்டார். இதன் காரணமாக, மக்கள் நலன் சார்ந்த எதிர்ப்புகளை அவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பதே தவறு என்றும் கனிமொழி எம்பி தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தருவை மைதானத்தில் கட்டணமில்லா பயிற்சி : அமைச்சர் அத்வ் அர்ஜுனாவிடம் கோரிக்கை
புதன் 15, ஜூலை 2026 5:06:21 PM (IST)

திருச்செந்தூரில் அண்ணாமலையின் வீ த லீடர்ஸ் மாநாடு ரத்து: தூத்துக்குடியில் நடத்தத் திட்டம்!
புதன் 15, ஜூலை 2026 4:18:19 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
புதன் 15, ஜூலை 2026 3:54:22 PM (IST)

மாணவர்களுக்கு உதவ டிஎம்பி அறக்கட்டளை தயார் : தலைமை செயல் அதிகாரி உறுதி!
புதன் 15, ஜூலை 2026 3:40:49 PM (IST)

தமிழ் பாப்திஸ்து துவக்க பள்ளியில் கல்வி வளர்ச்சி தின விழா
புதன் 15, ஜூலை 2026 3:16:29 PM (IST)

புன்னக்காயலில் ரூ.32 கோடி மீன் ஏலக்கூடம் உள்ளிட்ட அரசு திட்டங்கள் : ஆட்சியர் ஆய்வு!
புதன் 15, ஜூலை 2026 12:37:42 PM (IST)








