» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி தருவை மைதானத்தில் கட்டணமில்லா பயிற்சி : அமைச்சர் அத்வ் அர்ஜுனாவிடம் கோரிக்கை
புதன் 15, ஜூலை 2026 5:06:21 PM (IST)

தூத்துக்குடி தருவை மைதானத்தில் கட்டணமில்லா விளையாட்டு, நடைபயிற்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்று அமைச்சர் அத்வ் அர்ஜுனாவிடம் இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதான அரங்கமான தருவை மைதானத்தில், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கட்டணமின்றி விளையாட்டுப் பயிற்சிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்ளத் தடையின்றி அனுமதி வழங்கக் கோரி பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அதவ் அர்ஜுனாவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் இசக்கிமுத்து குமார் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், தருவை மைதானத்தில் கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, பால் பாட்மிண்டன், செட்டில் காக் போன்ற விளையாட்டுப் பயிற்சிகளும்; ஓடுதல், தாண்டுதல், எறிதல் போன்ற அத்லெடிக் பயிற்சிகளும்; உடற்பயிற்சிகளும் மாணவர்கள் மற்றும் வீரர்களுக்குக் கட்டணமின்றி வழங்கப்பட்டு வந்தன. மேலும் பொதுமக்கள் மற்றும் வயோதிகர்களின் நடைபயிற்சியும் அதன் சுற்றுப் பாதையில் கட்டணமில்லாமல் நடைபெற்று வந்தது.
மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கம் மற்றும் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுப் பிரத்தியேகக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட போதிலும், ஏனைய விளையாட்டுப் பயிற்சிகளுக்கு உரிய நேரத்தில் பொதுமக்கள் கட்டணமில்லாமல் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தற்போது மாவட்ட விளையாட்டு மைதானத் துறை சார்பில், வருவாய் நோக்கில் விளையாட்டுப் பயிற்சிகளுக்கும் நடைபயிற்சிக்கும் தடை விதிக்கப்பட்டு, மைதானத்தில் கட்டணம் செலுத்திய விளையாட்டுகளைத் தவிர ஏனைய கட்டணமில்லாப் பயிற்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் தினசரி மைதானத்தைப் பயன்படுத்தி வந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் போதைப் பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட்டுத் தினசரி குழுவாகச் சேர்ந்து கைப்பந்து விளையாடி வந்த 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் அடங்குவர்.
எனவே, இளைஞர்கள் மற்றும் வீரர்களை ஊக்குவிக்கவும், பொதுமக்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டும் தருவை மைதானத்தில் கட்டணமில்லா விளையாட்டுச் சேவை மற்றும் நடைபயிற்சியைத் தடையின்றி மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனுவின் நகல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கும் உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கே.ஆர்.கல்லூரியில் பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவிகள் உறுதிமொழி!
புதன் 15, ஜூலை 2026 5:53:24 PM (IST)

மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது : தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. பேட்டி!
புதன் 15, ஜூலை 2026 4:44:13 PM (IST)

திருச்செந்தூரில் அண்ணாமலையின் வீ த லீடர்ஸ் மாநாடு ரத்து: தூத்துக்குடியில் நடத்தத் திட்டம்!
புதன் 15, ஜூலை 2026 4:18:19 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
புதன் 15, ஜூலை 2026 3:54:22 PM (IST)

மாணவர்களுக்கு உதவ டிஎம்பி அறக்கட்டளை தயார் : தலைமை செயல் அதிகாரி உறுதி!
புதன் 15, ஜூலை 2026 3:40:49 PM (IST)

தமிழ் பாப்திஸ்து துவக்க பள்ளியில் கல்வி வளர்ச்சி தின விழா
புதன் 15, ஜூலை 2026 3:16:29 PM (IST)








