» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ் பாப்திஸ்து துவக்க பள்ளியில் கல்வி வளர்ச்சி தின விழா

புதன் 15, ஜூலை 2026 3:16:29 PM (IST)



செட்டிகுறிச்சி அருகே உள்ள தெற்கு கோனார் கோட்டை தமிழ் பாப்திஸ்து துவக்க பள்ளியில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கல்வி வளர்ச்சி தின விழா நடந்தது.

நாடு முழுவதும் கர்மவீரர் காமராஜரின் பிறந்த தினமான ஜூலை 15ம் தேதியை கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாட தமிழக அரசு அறிவித்தள்ளது.
தெற்கு கோனார் கோட்டை தமிழ் பாப்திஸ்து துவக்கப் பள்ளியில் நடந்த கல்வி வளர்ச்சி தின விழாவில் பள்ளி மாணவர்கள் காமராஜரின் மாஸ்க் அணிந்து பள்ளி முன்பிருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர்.காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

மாணவர்கள் அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ் பாப்திஸ்து பள்ளி தலைமை ஆசிரியர் ராஜையா தலைமை வகித்தார்.கோவில்பட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரமேஷ் குமார்,சீனிவாசன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி ஆசிரியர் ஜெயராணி அனைவரையும் வரவேற்றார். கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருக்குறள் புத்தகம் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.இதில் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஆசிரியை உஷா நந்தினி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory