» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் காமராஜ் பிறந்தநாள் விழா: திமுக, பாஜக, அரசியல் கட்சியினர் மரியாதை!
புதன் 15, ஜூலை 2026 12:05:30 PM (IST)

தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் காமராஜர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கடைப்பிடிக்கப்பட்டது. வ.உ.சி. மார்க்கெட் அருகிலுள்ள காமராஜர் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ஜெயசீலி, பேபிஏஞ்சலின், பாப்பாத்தி, இசக்கிராஜா, ராஜதுரை, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், ரெக்ஸ்லின், ஜான்சிராணி, சந்திரபோஸ், ராஜேந்திரன், கந்தசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில் நலதிட்ட உதவிகள்

அதிமுக அமைப்பு செயலாளரும் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி வஉசி மார்கெட் அருகில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவசிலைக்கும், தூத்துக்குடி சிவன் கோவில் தேரடி அருகில் அலங்கரிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு சேலை, வேஷ்டி மற்றும் இனிப்புகள் வழங்கி கமராஜரின் 124வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்கள்.
இந்நிகழ்வில் மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் இரா.ஹென்றி, பகுதி கழக செயலாளர்கள் ஜெய்கனேஷ், முருகன், மாவட்ட சார்பு அணிச் செயலாளர்கள் எம்.பெருமாள், நடராஜன், தனராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பா.ஜ.க. சார்பில்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் கர்மவீரர் காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட தலைவர் தலைமையில் நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராஜேஷ் கண்ணன், செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் சிவராமன், வசந்தன் மற்றும் மாநில, மாவட்ட, அணி, பிரிவு நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், தூத்துக்குடி காமராஜ் காய்கனி மார்க்கெட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு, காய்கனி மார்க்கெட் தலைவர் சி.த.சு. ஞானராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் மார்க்கெட் மேலாளர் நியூட்டன், துணை மேலாளர் ரவி உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
மதச்சார்பற்ற ஜனதாதளம்

மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்த தின விழா இன்று தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது. மாநில துணைத்தலைவர் எம்.சொக்கலிங்கம் தலைமையில், மாநகராட்சி வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கும், அதனை தொடர்ந்து வஉசி சந்தையில் உள்ள காமராஜர் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. முன்னதாக, பக்கிள்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டு, இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் மதச்சார்பற்ற ஜனதாதள மாவட்ட தலைவர் என்.வி.ராஜேந்திரபூபதி, செயலாளர் ஏ.கே.பாபு, துணை தலைவர் ஆர்.செல்வராஜ், மாநகர தலைவர் எம்.கோமதிநாயகம், துணை செயலாளர்கள் ராஜேந்திரன், சாத்தாவு, வட்ட நிர்வாகிகள் சுயம்புலிங்கம், கணபதி ராமன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு கொண்டனர்.
தட்சிண மாற நாடார் சங்கம் சார்பில்
நெல்லை தட்சிண மாற நாடார் சங்கத் தூத்துக்குடி கிளை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சங்க இயக்குநர்கள் கே. லிங்க செல்வன், கே.கே.ஆர். ஜெயக்கொடி ஆகியோர் தலைமையில் காமராஜர் சிலைக்குச் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சங்க உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களான தங்க மாரியப்பன், குமரகுருபரன், பொன்னரசு, சூரியகுமார், சௌந்தர்ராஜன், செல்வின் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
புதன் 15, ஜூலை 2026 3:54:22 PM (IST)

மாணவர்களுக்கு உதவ டிஎம்பி அறக்கட்டளை தயார் : தலைமை செயல் அதிகாரி உறுதி!
புதன் 15, ஜூலை 2026 3:40:49 PM (IST)

தமிழ் பாப்திஸ்து துவக்க பள்ளியில் கல்வி வளர்ச்சி தின விழா
புதன் 15, ஜூலை 2026 3:16:29 PM (IST)

புன்னக்காயலில் ரூ.32 கோடி மீன் ஏலக்கூடம் உள்ளிட்ட அரசு திட்டங்கள் : ஆட்சியர் ஆய்வு!
புதன் 15, ஜூலை 2026 12:37:42 PM (IST)

தூத்துக்குடியில் இறைச்சி வியாபாரி கொலை வழக்கில் 5பேர் கைது!
புதன் 15, ஜூலை 2026 11:04:16 AM (IST)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வடமாநில நபர் உயிரிழப்பு
புதன் 15, ஜூலை 2026 10:55:22 AM (IST)








