» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் இறைச்சி வியாபாரி கொலை வழக்கில் 5பேர் கைது!
புதன் 15, ஜூலை 2026 11:04:16 AM (IST)
தூத்துக்குடியில் பன்றி இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, 5வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் திரேஸ் நகரைச் சேர்ந்தவர் மணி மகன் சேகர் (40). இவர் மாதா நகர் பகுதியில் பன்றி இறைச்சி கடை நடத்தி வந்தார். கடந்த 13-ஆம் தேதி இரவு, மாதா நகர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே தனது நண்பர்கள் இருவருடன் சேகர் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று வாலிபர்கள் மதுபோதையில் அதிவேகமாக வந்துள்ளனர். குழந்தைகள் நடமாடும் சிறிய தெருவுக்குள் ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்கள் என சேகர் அவர்களை வழிமறித்துக் கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சேகர் அந்த வாலிபர்களில் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
தாக்குதலுக்குள்ளான வாலிபர், சிறிது நேரத்தில் தனது நண்பர்களுடன் பத்ரகாளியம்மன் கோவில் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு நின்று கொண்டிருந்த சேகரை அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். பலத்த காயமடைந்த சேகர், 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜூலை 14-ஆம் தேதி காலை 6 மணி அளவில் சேகர் உயிரிழந்தார்.
இக்கொலை சம்பவம் குறித்துத் தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையில் தலைமை காவலர்கள் கோவிந்தராஜ், ரவிகுமார், வேல்முருகன் மற்றும் முதல் நிலை காவலர் சரவண குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் இக்கொலையில் தொடர்புடைய நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்த இந்த நிலையில், கொலை தொடர்பாக தாளமுத்து நகர் விவேகானந்தா நகர் முருகன் மகன் சச்சின் (24), தாளமுத்துநகர் மேல அழகாபுரி மாரியப்பண் மகன் அஜய் (19), மாதா நகர் அமல் ராஜ் மகன் நாகராஜ் (19), சுடலையாபுரம் பரமசிவம் மகன் சுதன் (18), தாளமுத்து நகர் கருப்பசாமி மகன் சுடலைமுத்து (30) ஆகிய 5பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
புதன் 15, ஜூலை 2026 3:54:22 PM (IST)

மாணவர்களுக்கு உதவ டிஎம்பி அறக்கட்டளை தயார் : தலைமை செயல் அதிகாரி உறுதி!
புதன் 15, ஜூலை 2026 3:40:49 PM (IST)

தமிழ் பாப்திஸ்து துவக்க பள்ளியில் கல்வி வளர்ச்சி தின விழா
புதன் 15, ஜூலை 2026 3:16:29 PM (IST)

புன்னக்காயலில் ரூ.32 கோடி மீன் ஏலக்கூடம் உள்ளிட்ட அரசு திட்டங்கள் : ஆட்சியர் ஆய்வு!
புதன் 15, ஜூலை 2026 12:37:42 PM (IST)

தூத்துக்குடியில் காமராஜ் பிறந்தநாள் விழா: திமுக, பாஜக, அரசியல் கட்சியினர் மரியாதை!
புதன் 15, ஜூலை 2026 12:05:30 PM (IST)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வடமாநில நபர் உயிரிழப்பு
புதன் 15, ஜூலை 2026 10:55:22 AM (IST)








