» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழகத்தில் முழு மதுவிலக்கை உடனே அமல்படுத்த வேண்டும்: முதல்வர் விஜய்க்குச் சகோ.மோகன் சி. லாசரஸ் கோரிக்கை!
புதன் 15, ஜூலை 2026 10:48:40 AM (IST)
தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ச.ஜோசப் விஜய்க்கு, இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் நிறுவனர் சகோதரர் மோகன் சி. லாசரஸ் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் மதுப் பழக்கத்தினால் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்து வருவதாகத் தெரிவித்துள்ள மோகன் சி. லாசரஸ், குறிப்பாக இளைய தலைமுறை மற்றும் மாணவர்கள் மது அரக்கனின் பிடியில் சிக்கித் தங்களது எதிர்காலத்தை இழந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் சுமார் ஒன்றரை கோடி மக்கள் குடிகாரர்களாக மாறி இருப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். மதுவினால், சாலை விபத்துகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகுவதற்கு மதுவே முதன்மைக் காரணமாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய ஆட்சியை அமைத்துள்ள முதல்வர் ச.ஜோசப் விஜய், தமிழக மக்களின் நல்வாழ்வையும் எதிர்காலத் தலைமுறையினரின் ஒழுக்கத்தையும் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகளையும் படிப்படியாக மூடாமல் உடனடியாக முழுமையாக மூடி, மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என மோகன் சி. லாசரஸ் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
புதன் 15, ஜூலை 2026 3:54:22 PM (IST)

மாணவர்களுக்கு உதவ டிஎம்பி அறக்கட்டளை தயார் : தலைமை செயல் அதிகாரி உறுதி!
புதன் 15, ஜூலை 2026 3:40:49 PM (IST)

தமிழ் பாப்திஸ்து துவக்க பள்ளியில் கல்வி வளர்ச்சி தின விழா
புதன் 15, ஜூலை 2026 3:16:29 PM (IST)

புன்னக்காயலில் ரூ.32 கோடி மீன் ஏலக்கூடம் உள்ளிட்ட அரசு திட்டங்கள் : ஆட்சியர் ஆய்வு!
புதன் 15, ஜூலை 2026 12:37:42 PM (IST)

தூத்துக்குடியில் காமராஜ் பிறந்தநாள் விழா: திமுக, பாஜக, அரசியல் கட்சியினர் மரியாதை!
புதன் 15, ஜூலை 2026 12:05:30 PM (IST)

தூத்துக்குடியில் இறைச்சி வியாபாரி கொலை வழக்கில் 5பேர் கைது!
புதன் 15, ஜூலை 2026 11:04:16 AM (IST)








