» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பணம் வைத்துச் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!
புதன் 13, மே 2026 11:09:22 AM (IST)
புதூர் அருகே மயானத்தில் சட்டவிரோதமாகப் பணம் வைத்துச் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளக்கட்டான்குறிச்சி சுடுகாடு பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்துச் சூதாடுவதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், புதூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் துரைச்சாமி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பணம் வைத்துச் சூதாடிக்கொண்டிருந்த குளக்கட்டான்குறிச்சி கீழத்தெருவைச் சேர்ந்த முருகன் (48), முனியசாமி (57), கணேசன் (46), லட்சுமணன் (47) ஆகிய 4பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூபாய் 5,000/- ரொக்கப் பணம் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு : விடுமுறைக்கு வந்த இடத்தில் சோகம்!
வெள்ளி 15, மே 2026 12:28:40 PM (IST)

பொருளாதார நிலைத்தன்மையை காக்கவே விலை உயர்வு: பாஜக மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா விளக்கம்!
வெள்ளி 15, மே 2026 12:18:04 PM (IST)

காதல் திருமணம் செய்த இளைஞர் தற்கொலை!
வெள்ளி 15, மே 2026 12:10:25 PM (IST)

தூத்துக்குடி பூ மார்க்கெட் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை!
வெள்ளி 15, மே 2026 10:47:59 AM (IST)

தூத்துக்குடியில் மீனவர் படுகொலை: 4 பேர் கைது!
வெள்ளி 15, மே 2026 10:42:13 AM (IST)

தூத்துக்குடி போலீஸ் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தம்: எஸ்.பி., மதன் ஆய்வு!
வெள்ளி 15, மே 2026 9:01:28 AM (IST)










