» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இளம்பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்தவர் கைது!
வெள்ளி 15, மே 2026 8:58:07 AM (IST)
கயத்தாறு அருகே கோவில் கொடை விழாவின் போது இளம்பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம்,கயத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட புதுக்கோட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (40), தொழிலாளி. இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் முனுசாமி என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இரு குடும்பத்தாருக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சந்திமரியம்மன் கோவில் கொடை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான மஞ்சள் நீராட்டு ஊர்வலம் இரவு நேரத்தில் வடக்குத் தெரு வழியாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது பெருமாள் மற்றும் முனுசாமி ஆகிய இருவரது குடும்பத்தினரும் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தனர்.
அப்போது மதுபோதையில் இருந்த பெருமாள், முனுசாமியின் மனைவி கனகலட்சுமியை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனை கனகலட்சுமி தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த பெருமாள், அவருக்குக் கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து கனகலட்சுமி அளித்த புகாரின் பேரில், கயத்தாறு காவல் உதவி ஆய்வாளர் காந்தி ராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதன் அடிப்படையில், பெண்ணிற்கு அவதூறு மற்றும் கொலைமிரட்டல் விடுத்த குற்றத்திற்காகப் பெருமாளைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டியில் புத்தகத் திருவிழா தொடக்கம்: 10ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள் குவிப்பு!
வெள்ளி 15, மே 2026 3:54:53 PM (IST)

மாணவர்களின் கோடை முகாம் திட்டத்திற்கு என்டிபிஎல் சார்பில் ரூ. 4 லட்சம் நிதியுதவி: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 15, மே 2026 3:07:46 PM (IST)

பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு : விடுமுறைக்கு வந்த இடத்தில் சோகம்!
வெள்ளி 15, மே 2026 12:28:40 PM (IST)

பொருளாதார நிலைத்தன்மையை காக்கவே விலை உயர்வு: பாஜக மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா விளக்கம்!
வெள்ளி 15, மே 2026 12:18:04 PM (IST)

காதல் திருமணம் செய்த இளைஞர் தற்கொலை!
வெள்ளி 15, மே 2026 12:10:25 PM (IST)

தூத்துக்குடி பூ மார்க்கெட் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை!
வெள்ளி 15, மே 2026 10:47:59 AM (IST)










