» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மீனவர் படுகொலை: 4 பேர் கைது!

வெள்ளி 15, மே 2026 10:42:13 AM (IST)

தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட மோதலில் மீனவர் ஒருவரைச் சரமாரியாகக் குத்திக் கொலை செய்த வழக்கில் இளஞ்சிறார் உட்பட 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி தாளமுத்து நகர் பூ பாண்டியாபுரத்தைச் சேர்ந்த மீனவர் ஸ்னோவின் (26). இவரும் இவரது நண்பரான திரேஸ்புரத்தைச் சேர்ந்த சூசை (28) என்பவரும் நேற்று முன்தினம் இரவு கடலுக்குச் சென்று விட்டுத் திரும்பியுள்ளனர். பின்னர், தாளமுத்து நகர் மேட்டுப்பட்டி உமையம்மாள் கோவில் அருகே அமர்ந்து இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தார்களாம். 

அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவர்களுடன் இணைந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்னோவினை சரமாரியாகக் குத்தினர். இதனைத் தடுக்க முயன்ற சூசைக்கும் தலையில் பலத்த கத்திக்குத்து விழுந்தது. 

பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருவரையும் மீட்ட அப்பகுதியினர், 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி ஸ்னோவின் பரிதாபமாக உயிரிழந்தார். சூசைக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்துத் தாளமுத்து நகர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கிங்ஸ்லி தேவ் ஆனந்த் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். 

இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக தலைமறைவாக இருந்த லூர்தம்மாள்புரம் மாலைராஜ் மகன் சந்தனராஜ் என்ற பாண்டி (23), சங்குகுளி காலனி இசக்கிமுத்து மகன் முத்துக்குமார் என்ற கருப்பு (20), முனியசாமி மகன் இசக்கி முத்து (19), மற்றும் ஒரு இளஞ்சிறார் உட்பட 4பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory