» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காதல் திருமணம் செய்த இளைஞர் தற்கொலை!

வெள்ளி 15, மே 2026 12:10:25 PM (IST)

தூத்துக்குடியில், காதல் திருமணம் செய்த இளைஞர் ஒருவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி கோரம்பள்ளம், ஸ்ரீனி நகரைச் சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் மகன் அந்தோணி சேவியர் (28). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த இவர், பிருந்தா (28) என்பவரைக் காதல் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்குத் 5வயதில் என்ற ஒரு மகன் உள்ளார். பிருந்தா தூத்துக்குடி அருகே உள்ள புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று இரவு பிருந்தா தனது பணிக்காகச் சுங்கச்சாவடிக்குச் சென்றுவிட்டார். இன்று காலை அவர் திரும்பி வந்தபோது, அந்தோணி சேவியர் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்துப் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தோணி சேவியரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத் தற்கொலைக்கான காரணம் என்ன? குடும்பப் பிரச்சினையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory