» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொருளாதார நிலைத்தன்மையை காக்கவே விலை உயர்வு: பாஜக மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா விளக்கம்!

வெள்ளி 15, மே 2026 12:18:04 PM (IST)

சர்வதேசச் சந்தையில் நிலவும் அசாதாரணச் சூழல் மற்றும் நாட்டின் பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டே பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பாஜக ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:"கடந்த 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றம் செய்யாமல் பொதுமக்களின் சுமையைக் குறைக்க மத்திய அரசு தொடர்ந்து பாடுபட்டு வந்தது. குறிப்பாக, கடந்த காலங்களில் விலையை உயர்த்துவதற்குப் பதிலாக, மத்திய அரசே தனது கலால் வரியைக் (Excise Duty) குறைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தது.
  • நவம்பர் 2021: பெட்ரோலுக்கு ₹5, டீசலுக்கு ₹10 குறைப்பு.
  • மே 2022: பெட்ரோலுக்கு ₹8, டீசலுக்கு ₹6 குறைப்பு.
இந்த இரண்டு கட்ட வரிக்குறைப்புகளால் மத்திய அரசுக்கு சுமார் ₹2.2 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இருப்பினும், மக்கள் நலனை முன்னிறுத்தியே பிரதமர் மோடி தலைமையிலான அரசு இதனைச் செய்தது."

தற்போதைய உயர்விற்கான காரணங்கள்: தற்போது மேற்காசிய நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதோடு, டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதும் இறக்குமதிச் செலவை உயர்த்தியுள்ளது.

வாங்கிய விலையை விடக் குறைவான விலைக்குத் தொடர்ந்து விற்பனை செய்வது எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். இது எதிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும்.

சாலை வசதிகள், விவசாய நலத்திட்டங்கள், மக்கள் பாதுகாப்பு போன்ற அடிப்படைத் தேவைகளுக்கும், மக்கள் நலத்திட்டங்களுக்கும் அரசுக்கு நிலையான வருவாய் அவசியமாகிறது. எனவே, நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த அவசியமான நடவடிக்கையை, பொதுமக்கள் அரசியல் நோக்கில் பார்க்காமல் புரிந்துகொள்ள வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory