» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லாரிகள் மோதி கோர விபத்து: டிரைவர் படுகாயம்!

புதன் 13, மே 2026 8:54:07 AM (IST)



தூத்துக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் கண்டெய்னர் லாரியும், நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் படுகாயமடைந்தார்.

சென்னையிலிருந்து கார் உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று குறுக்குச்சாலையில் உள்ள கிடங்கிற்கு வந்தது. அங்கு லோடை இறக்கிவிட்டு, மீண்டும் தூத்துக்குடி நோக்கி நான்கு வழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தது. லாரியைச் சென்னை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த போர்ராஜ் (45) என்பவர் ஓட்டிச் சென்றார்.

வாலசமுத்திரம் அருகே லாரி வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு மறுபுறம் பாய்ந்தது. அப்போது தூத்துக்குடியிலிருந்து திருச்சி நோக்கி நிலக்கரி ஏற்றி வந்த மற்றொரு லாரியின் மீது பலமாக மோதியது.

மோதிய வேகத்தில் இரண்டு லாரிகளும் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் தலைக்குப்புறக் கவிழ்ந்தன. இதில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் போர்ராஜ் இடிபாடுகளுக்குள் சிக்கிப் படுகாயமடைந்தார். நிலக்கரி லாரியை ஓட்டி வந்த ஓட்டப்பிடாரம் இந்திரா நகரைச் சேர்ந்த மாரிச்செல்வம் (28) அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்.

தகவல் அறிந்து புதியம்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயமடைந்த போர்ராஜை மீட்டு சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்து குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory