» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவி பிரிந்து சென்றதால் விபரீத முடிவு: ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை!
புதன் 13, மே 2026 8:46:09 AM (IST)
கயத்தாறு அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்ற மன உளைச்சலில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நாகலாபுரம் கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்த விவசாயி பூலையாத்தேவர் என்பவரது மகன் வெயில்முத்து (48). இவர் கயத்தாறில் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு சேர்மத்தாய் என்ற மனைவியும், மல்லிகை மற்றும் முத்துராஜ் ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.
வெயில்முத்துவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட மோதலால், சேர்மத்தாய் தனது குழந்தைகளுடன் கணவரை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். தன்னுடன் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு வெயில்முத்து தனது மனைவியை அழைத்துள்ளார்.
ஆனால், மதுப் பழக்கத்தைக் காரணம் காட்டி அவர் வர மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதில் கடும் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட வெயில்முத்து, நேற்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். நீண்ட நேரமாக வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது அவர் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் காந்திராஜன் ஆகியோர் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு : விடுமுறைக்கு வந்த இடத்தில் சோகம்!
வெள்ளி 15, மே 2026 12:28:40 PM (IST)

பொருளாதார நிலைத்தன்மையை காக்கவே விலை உயர்வு: பாஜக மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா விளக்கம்!
வெள்ளி 15, மே 2026 12:18:04 PM (IST)

காதல் திருமணம் செய்த இளைஞர் தற்கொலை!
வெள்ளி 15, மே 2026 12:10:25 PM (IST)

தூத்துக்குடி பூ மார்க்கெட் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை!
வெள்ளி 15, மே 2026 10:47:59 AM (IST)

தூத்துக்குடியில் மீனவர் படுகொலை: 4 பேர் கைது!
வெள்ளி 15, மே 2026 10:42:13 AM (IST)

தூத்துக்குடி போலீஸ் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தம்: எஸ்.பி., மதன் ஆய்வு!
வெள்ளி 15, மே 2026 9:01:28 AM (IST)










