» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போக்சோ வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 12, மே 2026 9:16:44 PM (IST)
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான நபர் மீது, தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் (குண்டர் சட்டம்) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (56) என்பவர், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் முக்கிய எதிரியாகச் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இவரது தொடர் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குப் பரிந்துரை செய்தார்.
இதனை ஆய்வு செய்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன், ராமகிருஷ்ணனைத் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சித் தலைவருக்குப் பரிந்துரை வழங்கினார். இதனை ஏற்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ராமகிருஷ்ணனை இன்று கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் (1982) கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு : விடுமுறைக்கு வந்த இடத்தில் சோகம்!
வெள்ளி 15, மே 2026 12:28:40 PM (IST)

பொருளாதார நிலைத்தன்மையை காக்கவே விலை உயர்வு: பாஜக மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா விளக்கம்!
வெள்ளி 15, மே 2026 12:18:04 PM (IST)

காதல் திருமணம் செய்த இளைஞர் தற்கொலை!
வெள்ளி 15, மே 2026 12:10:25 PM (IST)

தூத்துக்குடி பூ மார்க்கெட் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை!
வெள்ளி 15, மே 2026 10:47:59 AM (IST)

தூத்துக்குடியில் மீனவர் படுகொலை: 4 பேர் கைது!
வெள்ளி 15, மே 2026 10:42:13 AM (IST)

தூத்துக்குடி போலீஸ் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தம்: எஸ்.பி., மதன் ஆய்வு!
வெள்ளி 15, மே 2026 9:01:28 AM (IST)










