» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குமரி மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது - விஜய் வசந்த் எம்.பி., கண்டனம்
செவ்வாய் 12, மே 2026 8:52:25 PM (IST)
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியைச் சேர்ந்த 6 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதற்கு விஜய் வசந்த் எம்.பி., தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி கிராமத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மண்டபம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்றபோது, இலங்கை கடற்படையினரால் அத்துமீறிக் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டியதாகக் கூறி தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கைது செய்யும் இலங்கை கடற்படையின் இந்த மனிதாபிமானமற்ற செயல் கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறை கடலுக்குச் செல்லும் போதும், தங்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இருக்குமா என்ற அச்சத்திலேயே செல்லும் நிலை நீடிக்கிறது. இலங்கை கடற்படையினரின் இந்தத் தொடர் அடக்குமுறைக்கு மத்திய அரசு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்."
இச்சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்த விஜய் வசந்த் எம்.பி., சிறைபிடிக்கப்பட்ட மணக்குடி மீனவர்கள் 6 பேரையும், அவர்களது விசைப்படகையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளை உயர்மட்டத்தில் நடத்தி, இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு : விடுமுறைக்கு வந்த இடத்தில் சோகம்!
வெள்ளி 15, மே 2026 12:28:40 PM (IST)

பொருளாதார நிலைத்தன்மையை காக்கவே விலை உயர்வு: பாஜக மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா விளக்கம்!
வெள்ளி 15, மே 2026 12:18:04 PM (IST)

காதல் திருமணம் செய்த இளைஞர் தற்கொலை!
வெள்ளி 15, மே 2026 12:10:25 PM (IST)

தூத்துக்குடி பூ மார்க்கெட் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை!
வெள்ளி 15, மே 2026 10:47:59 AM (IST)

தூத்துக்குடியில் மீனவர் படுகொலை: 4 பேர் கைது!
வெள்ளி 15, மே 2026 10:42:13 AM (IST)

தூத்துக்குடி போலீஸ் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தம்: எஸ்.பி., மதன் ஆய்வு!
வெள்ளி 15, மே 2026 9:01:28 AM (IST)










