» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 210 பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆய்வு : விதிகளை மீறினால் நடவடிக்கை என எச்சரிக்கை!
செவ்வாய் 12, மே 2026 5:10:05 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் மாணவர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் சரியாக உள்ளனவா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன், ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் ஆண்டுதோறும் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி, தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் நடைபெற்றது.
ஆட்சியர் மற்றும் எஸ்.பி. தலைமையிலான அதிகாரிகள் ஒவ்வொரு வாகனமாகச் சென்று, அவசரக் கால கதவுகள் (Emergency Exit) சரியாகச் செயல்படுகின்றனவா? முதலுதவிப் பெட்டிகள் மற்றும் தீயணைப்புக் கருவிகள் தயார் நிலையில் உள்ளனவா? வாகனத்தின் தளம் (Floorboard) மற்றும் படிக்கட்டுகள் உறுதியாக உள்ளனவா?
வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா? ஓட்டுநர்களின் உரிமம் மற்றும் வாகனப் பராமரிப்பு ஆவணங்கள் சரியாக உள்ளனவா? போன்ற வசதிகளைச் சரிபார்த்தனர். இந்த ஆய்வின் போது வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு : விடுமுறைக்கு வந்த இடத்தில் சோகம்!
வெள்ளி 15, மே 2026 12:28:40 PM (IST)

பொருளாதார நிலைத்தன்மையை காக்கவே விலை உயர்வு: பாஜக மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா விளக்கம்!
வெள்ளி 15, மே 2026 12:18:04 PM (IST)

காதல் திருமணம் செய்த இளைஞர் தற்கொலை!
வெள்ளி 15, மே 2026 12:10:25 PM (IST)

தூத்துக்குடி பூ மார்க்கெட் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை!
வெள்ளி 15, மே 2026 10:47:59 AM (IST)

தூத்துக்குடியில் மீனவர் படுகொலை: 4 பேர் கைது!
வெள்ளி 15, மே 2026 10:42:13 AM (IST)

தூத்துக்குடி போலீஸ் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தம்: எஸ்.பி., மதன் ஆய்வு!
வெள்ளி 15, மே 2026 9:01:28 AM (IST)










