» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி முத்தாரம்மன் கோவில் கொடை விழா: 4,000 பேருக்கு அன்னதானம்!
செவ்வாய் 12, மே 2026 4:42:19 PM (IST)

தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு, 4,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கொடை விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி சைவ வேளாளர் மண்டபத்தில் ஹரிஷ்மா கோல்ட் பைனான்ஸ் சார்பில் அதன் அதிபர் பி. திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டின் படி, 4,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான நிகழ்ச்சியைத் மாவட்ட அதிமுக தொழிற்சங்கத் தலைவரும், முன்னாள் மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவருமான ஆர். சுதாகர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சுப்பிரமணியசாமி மகிமை அறக்கட்டளை தலைவர் எம்.எஸ்.எஸ். கந்தப்பன், எல்.ஐ.சி. கிட்டு, தொழில் அதிபர்கள் டி.ஏ. தெய்வநாயகம், எஸ்.பி. டைகர் சிவா, பாஜக மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், 39-வது வார்டு மகளிர் அணி தலைவி உஷா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு : விடுமுறைக்கு வந்த இடத்தில் சோகம்!
வெள்ளி 15, மே 2026 12:28:40 PM (IST)

பொருளாதார நிலைத்தன்மையை காக்கவே விலை உயர்வு: பாஜக மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா விளக்கம்!
வெள்ளி 15, மே 2026 12:18:04 PM (IST)

காதல் திருமணம் செய்த இளைஞர் தற்கொலை!
வெள்ளி 15, மே 2026 12:10:25 PM (IST)

தூத்துக்குடி பூ மார்க்கெட் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை!
வெள்ளி 15, மே 2026 10:47:59 AM (IST)

தூத்துக்குடியில் மீனவர் படுகொலை: 4 பேர் கைது!
வெள்ளி 15, மே 2026 10:42:13 AM (IST)

தூத்துக்குடி போலீஸ் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தம்: எஸ்.பி., மதன் ஆய்வு!
வெள்ளி 15, மே 2026 9:01:28 AM (IST)










