» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவியை துன்புறுத்திய வாலிபர் கொடூர கொலை : மைத்துனர் உள்பட 2பேர் கைது!
செவ்வாய் 12, மே 2026 3:51:34 PM (IST)
தூத்துக்குடியில் சகோதரியைத் துன்புறுத்திய ஆத்திரத்தில், அவரது கணவரை கொலை செய்த வழக்கில் மைத்துனர் உள்பட 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி சக்தி விநாயகர் புரம் 4வது தெருவைச் சேர்ந்தவர் பூலப்பன் மகன் அந்தோணி சேசுராஜ் (27). இவருக்கும் தாளமுத்துநகர் ஆ.சண்முகபுரத்தைச் சேர்ந்த காசிராஜன் என்பவரது மகளைக் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
மதுபோதையில் அந்தோணி சேசுராஜ் தனது மனைவியை அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவரது மனைவி, கடந்த ஒரு மாதத்திற்கு முன் கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டிற்குச் சென்றுவிட்டார். தனது சகோதரியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்த அந்தோணி சேசுராஜ் மீது ஆத்திரம் அடைந்த அவரது மைத்துனர் அருண்குமார் (27) மற்றும் அவரது நண்பர்கள் சுதாகர், செல்வகுமார் மற்றும் ஒருவர் சேர்ந்து அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளனர்.
நேற்று இரவு, தூத்துக்குடி ஸ்டெம் பார்க் பின்புறம் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு அந்தோணி சேசுராஜை அவர்கள் மது குடிக்க வருமாறு ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் மது அருந்தியதாகத் தெரிகிறது. அப்போது மீண்டும் வாக்குவாதம் ஏற்படவே, அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அந்தோணி சேசுராஜை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக அருண்குமார் மற்றும் அவரது நண்பரான ஆனந்தராஜ் மகன் சுதாகர் (29) ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர். இக்கொலையில் தொடர்புடைய 2பேரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு : விடுமுறைக்கு வந்த இடத்தில் சோகம்!
வெள்ளி 15, மே 2026 12:28:40 PM (IST)

பொருளாதார நிலைத்தன்மையை காக்கவே விலை உயர்வு: பாஜக மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா விளக்கம்!
வெள்ளி 15, மே 2026 12:18:04 PM (IST)

காதல் திருமணம் செய்த இளைஞர் தற்கொலை!
வெள்ளி 15, மே 2026 12:10:25 PM (IST)

தூத்துக்குடி பூ மார்க்கெட் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை!
வெள்ளி 15, மே 2026 10:47:59 AM (IST)

தூத்துக்குடியில் மீனவர் படுகொலை: 4 பேர் கைது!
வெள்ளி 15, மே 2026 10:42:13 AM (IST)

தூத்துக்குடி போலீஸ் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தம்: எஸ்.பி., மதன் ஆய்வு!
வெள்ளி 15, மே 2026 9:01:28 AM (IST)










