» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கே.சின்னத்துரை தங்க மாளிகையில் அட்சய திருதியையில் தங்கம் வாங்க குவிந்த மக்கள்!
திங்கள் 20, ஏப்ரல் 2026 7:09:52 PM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ தங்க மாளிகையில் அட்சய திருதியை முன்னிட்டு நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. தங்கம் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு எடைக்கு, எடை வெள்ளி இலவசமாக வழங்கப்பட்டது.
தென் தமிழகத்தில் மக்களின் பேராதரவை பெற்ற பிரபல ஜவுளி மற்றும் தங்க நகை விற்பனை நிறுவனமான கே.சின்னத்துரை அன்கோ தங்க மாளிகை, ஏரல், திருச்செந்தூர், தூத்துக்குடி, சென்னை, திருநெல்வேலியில் இயங்கி வருகிறது. தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ தங்க மாளிகையில் அட்சய திருதியை முன்னிட்டு கடந்த 1 வாரமாக சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது ஐதீகம் என்பதால் நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. தங்கம் வாங்கிய அனைவருக்கும் அதே எடைக்கு வெள்ளி பொருட்கள் வழங்கப்பட்டது. அட்சய திருதியை முன்னிட்டு, பட்டுசேலை வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சின்னத்துரை அன்கோ ஜவுளி நிறுவனத்தின் பட்டுச் சேலை பிரிவிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு மோர், தயிர்சாதம், கேசரி போன்றவையும் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை நிறுவன பங்குதாரர்கள் கே.திருநாவுக்கரசு, எஸ்.அரிராமகிருஷ்ணன், டி.நமசிவாயம் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
திங்கள் 20, ஏப்ரல் 2026 4:47:43 PM (IST)

திருமணமான 5 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை: ஆர்.டி.ஓ விசாரணை
திங்கள் 20, ஏப்ரல் 2026 4:40:30 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.1.68 கோடி ரொக்கம்; ரூ.44 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்!
திங்கள் 20, ஏப்ரல் 2026 4:24:24 PM (IST)

வாக்குப்பதிவு நாள் வரை 144 தடை உத்தரவு: தேர்தல் விதிமுறைகளை மீறினால் 2 ஆண்டு சிறை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 3:19:19 PM (IST)

வாக்குப்பதிவு இயந்திரங்களை திரும்பப் பெறும் பணிகள் குறித்த பயிற்சி: ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு
திங்கள் 20, ஏப்ரல் 2026 12:17:08 PM (IST)

தூத்துக்குடியில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் : திமுக பிரமுகர் கைது - ரூ.1,05,000 ரொக்கம் பறிமுதல்!
திங்கள் 20, ஏப்ரல் 2026 11:36:22 AM (IST)
_1776663511.jpg)






