» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாக்குப்பதிவு இயந்திரங்களை திரும்பப் பெறும் பணிகள் குறித்த பயிற்சி: ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு

திங்கள் 20, ஏப்ரல் 2026 12:17:08 PM (IST)



தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, வாக்குப்பதிவு முடிந்தவுடன் இயந்திரங்கள் மற்றும் ஆவணங்களைத் திரும்பப் பெறும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பில், மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் வரவேற்பறைப் பணியாளர்கள் கலந்துகொண்டனர். 

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி, ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன், அனைத்து வாக்குச்சாவடிகளிலிருந்தும் மண்டல அலுவலர்கள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் (Control Unit) மற்றும் விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குக் கொண்டு வரப்படும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் கையேடு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் கொண்டு வரப்படும். இவற்றை மண்டல அலுவலர்களிடமிருந்து வரவேற்பறையில் பணியமர்த்தப்பட்டுள்ள பணியாளர்கள் முறையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். வாக்குப் பதிவுக்குப் பின்னர் இயந்திரங்களைச் சரியான முறையில் கையாளுதல் மற்றும் சான்றுகள் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்தல் குறித்து இந்தப் பயிற்சிக் கூட்டத்தில் விளக்கிச் சொல்லப்பட்டது. இப்பணிகளை எவ்விதத் தாமதமுமின்றி மேற்கொள்ள ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உஷா (விளாத்திகுளம்), மி.பிரபு (தூத்துக்குடி), ரா.கௌதம் (திருச்செந்தூர்), செந்தில்வேல் முருகன் (திருவைகுண்டம்), சுப்புலட்சுமி (ஓட்டப்பிடாரம்), ஹிமான்ஷு மங்கள் (கோவில்பட்டி), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





Thoothukudi Business Directory