» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
திங்கள் 20, ஏப்ரல் 2026 4:47:43 PM (IST)
தூத்துக்குடியில் வீட்டில் மின்சார மோட்டார் சுவிட்சைப் போட்டபோது மின்சாரம் பாய்ந்ததில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாதவன் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த்குமார். இவரது மனைவி தங்கமாரியம்மாள் (35). இவர் இன்று தனது வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, தண்ணீர் மோட்டாரை இயக்குவதற்காக அதன் சுவிட்சைப் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
அவர் கீழே விழுந்து கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரது கணவர் ஆனந்த்குமாருக்குத் தகவல் அளித்தனர். அவர் தனது மனைவியைக் காப்பாற்ற முயன்றபோது, அவர் மீதும் லேசாக மின்சாரம் பாய்ந்துள்ளது. பின்னர், உடனடியாக கார் மூலம் தங்கமாரியம்மாளைத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் தங்கமாரியம்மாளைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிச்செல்வம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கே.சின்னத்துரை தங்க மாளிகையில் அட்சய திருதியையில் தங்கம் வாங்க குவிந்த மக்கள்!
திங்கள் 20, ஏப்ரல் 2026 7:09:52 PM (IST)

திருமணமான 5 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை: ஆர்.டி.ஓ விசாரணை
திங்கள் 20, ஏப்ரல் 2026 4:40:30 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.1.68 கோடி ரொக்கம்; ரூ.44 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்!
திங்கள் 20, ஏப்ரல் 2026 4:24:24 PM (IST)

வாக்குப்பதிவு நாள் வரை 144 தடை உத்தரவு: தேர்தல் விதிமுறைகளை மீறினால் 2 ஆண்டு சிறை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 3:19:19 PM (IST)

வாக்குப்பதிவு இயந்திரங்களை திரும்பப் பெறும் பணிகள் குறித்த பயிற்சி: ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு
திங்கள் 20, ஏப்ரல் 2026 12:17:08 PM (IST)

தூத்துக்குடியில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் : திமுக பிரமுகர் கைது - ரூ.1,05,000 ரொக்கம் பறிமுதல்!
திங்கள் 20, ஏப்ரல் 2026 11:36:22 AM (IST)
_1776663511.jpg)






