» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.1.68 கோடி ரொக்கம்; ரூ.44 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்!

திங்கள் 20, ஏப்ரல் 2026 4:24:24 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் இன்று வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.68 கோடி ரொக்கம் மற்றும் ரூ. 44 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சோதனையில் இன்று (20.04.2026) வரை கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்டுள்ளார்.

ரொக்கத்தொகை: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக மொத்தம் ரூ. 1,68,23,718 (ஒரு கோடியே 68 லட்சத்து 23 ஆயிரத்து 718 ரூபாய்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொருட்கள்: பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 38,36,412 மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மதுபானங்கள்: தேர்தல் விதிமுறைகளை மீறி கடத்தப்பட்ட மற்றும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த ரூ. 6,18,317 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், உரிய ஆவணங்களின்றிப் பணம் மற்றும் பரிசுப் பொருட்களைக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் வாக்களித்த ஆட்சியர் 

இதனிடையே தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது தபால் வாக்கினை ஆட்சியர் விஷு மகாஜன் பதிவு செய்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory