» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமணமான 5 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை: ஆர்.டி.ஓ விசாரணை

திங்கள் 20, ஏப்ரல் 2026 4:40:30 PM (IST)

காட்டுநாயக்கன்பட்டியில் திருமணமான 5 ஆண்டுகளில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து  ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த வேல் மணிகண்டன் என்பவரின் மனைவி மகாலட்சுமி (24). இவர்களுக்குத் திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. இந்நிலையில், மகாலட்சுமி கடந்த சில காலமாகத் தீவிர வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

உடல்நலப் பாதிப்பால் மனமுடைந்த மகாலட்சுமி, நேற்று இரவு தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்துத் தகவல் அறிந்த எப்பொதும்வென்றான் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகாலட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால், ஆர்.டி.ஓ விசாரணைக்கும் பரிந்துரை செய்யபட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory