» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா: நாளை கொடியேற்றம்; ஏப்.30-ல் தேரோட்டம்!

திங்கள் 20, ஏப்ரல் 2026 11:07:54 AM (IST)

தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா நாளை (21-ஆம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதப் பெருந்திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை ஏப்ரல் 21-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

இதையொட்டி காலை 7.15 மணிக்கு கொடிப்பட்டம் ரதவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 10.45 மணியில் இருந்து 11.10 மணிக்குள் சிவன் கோவிலில் நந்தீஸ்வரர் முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து,  இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் ரதவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெகிறது.

ஏப்.22 ம் தேதி காலை 9.00 மணிக்கு மேல் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊற்றும் விழா நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் (சிம்மம், பூதம், ரிஷபம், பஞ்சமூர்த்தி) வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




Thoothukudi Business Directory