» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பலசரக்கு கடை உரிமையாளர் தற்கொலை : போலீஸ் விசாரணை!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:27:14 AM (IST)
கயத்தாறு அருகே பலசரக்கு கடை உரிமையாளர், அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அய்யனாரூத்து தெற்குத் தெருவைச் சேர்ந்த ரிபாய் என்பவரின் மகன் அசரப் (33). திருமணமாகாத இவர், தனது ஊரில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். கடந்த சில காலமாக மனநல பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்த அசரப், அவ்வப்போது தனது தந்தையின் சொந்த ஊரான வீராணத்திற்குச் சென்று உறவினர்களுடன் தங்கிவிட்டு வருவது வழக்கம்.
கடந்த 8-ம் தேதி, வீராணத்திற்குச் செல்வதாகத் தனது தாயிடம் கூறிவிட்டுச் சென்ற அசரப், நீண்ட நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த அவரது தாயார் அவரைத் தேடி வந்துள்ளார்.
இந்நிலையில், அய்யனாரூத்திலிருந்து கயத்தாறு செல்லும் சாலையில் உள்ள கன்னி கோவில் அருகே, பஞ்சாயத்திற்குச் சொந்தமான கருங்காட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதைக் கவனித்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, அசரப் சடலமாகத் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
உடலுக்கு அருகே குளிர்பான பாட்டில் மற்றும் மனநல சிகிச்சைக்கான மாத்திரை அட்டைகள் சிதறிக் கிடந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் தலைமையிலான போலீசார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனநல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அசரப், அளவுக்கு அதிகமான மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆத்தூர் வெற்றிலை: வரலாற்று ஆவணக் குழுவின் விழிப்புணர்வுப் புத்தகம் வெளியீடு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:14:05 AM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி யாருக்கு? பலமுனை போட்டியால் வாக்குகள் சிதறும் நிலை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 10:33:25 AM (IST)

மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப சாவு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 10:24:56 AM (IST)

செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனித் திருவிழா தொடக்கம்: ஏப்ரல் 13ல் தேரோட்டம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:20:49 AM (IST)

பைக் மீது அரசு பேருந்து மோதல்: இளைஞர் பலி!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:00:53 AM (IST)

ஆட்சியர் காரை மறித்து அவதூறு பேசிய வாலிபர்; கார் பறிமுதல் – போலீஸ் விசாரணை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 7:56:38 AM (IST)







