» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு: அறுவடைப் பணியின்போது சோகம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 10:24:56 AM (IST)
கழுகுமலை அருகே, விளைநிலத்தில் அறுவடைப் பணியின்போது மின்சாரம் தாக்கிப் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் (37). விவசாயியான இவர், க.சுப்ரமணியபுரம் பகுதியில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். கடந்த மார்ச் மாதம் 26-ஆம் தேதி தனது காட்டில் மக்காச்சோளம் அறுவடை செய்யும் இயந்திரத்தில் பால்ராஜ் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக இயந்திரத்தின் மீது மேலே சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பி உரசியதில், பால்ராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சுமார் 70 சதவீதத் தீக்காயங்களுடன் அவர் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த மார்ச் 31-ஆம் தேதி மதுரை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பால்ராஜ், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து கழுகுமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அறுவடைப் பணியின் போது மின்சாரம் தாக்கி இள வயது விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி: அமைச்சர் கீதா ஜீவன் வேட்புமனுத் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 12:33:35 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் வேட்புமனுத் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:59:46 AM (IST)

ஓட்டப்பிடாரத்தில் தவெக வேட்பாளர் மதன் ராஜா வேட்புமனுத் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:55:15 AM (IST)

ஆத்தூர் வெற்றிலை: வரலாற்று ஆவணக் குழுவின் விழிப்புணர்வுப் புத்தகம் வெளியீடு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:14:05 AM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி யாருக்கு? பலமுனை போட்டியால் வாக்குகள் சிதறும் நிலை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 10:33:25 AM (IST)

செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனித் திருவிழா தொடக்கம்: ஏப்ரல் 13ல் தேரோட்டம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:20:49 AM (IST)







