» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது அரசு பேருந்து மோதல்: இளைஞர் பலி!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:00:53 AM (IST)
திருச்செந்தூர் அருகே அரசு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற நண்பர் பலத்த காயம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி ஏ.ஐ.டி.யு.சி. காலனியைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் முகேஷ் கண்ணன் (27), ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். நேற்று பகலில் முகேஷ் கண்ணன், தனது நண்பரான லட்சுமிபுரத்தைச் சேர்ந்த சிவபிரசாத் (24) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூர் - நாகர்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
பரமன்குறிச்சி அருகே உள்ள ஒரு வளைவில் மோட்டார் சைக்கிள் திரும்பியபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த அரசு பேருந்தும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தின் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த முகேஷ் கண்ணன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், பலத்த காயங்களுடன் உயிருக்குப்போராடிக் கொண்டிருந்த சிவபிரசாத்தை மீட்டுத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்து வந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார், முகேஷ் கண்ணனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வளைவில் அதிவேகமாக வந்ததே விபத்திற்குக் காரணமா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண், மானம், மொழியைக் காக்க மீண்டும் திமுக ஆட்சி: தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 7:54:45 PM (IST)

லாரி மீது கார் மோதல்: தம்பதி உட்பட 4 பேர் பலி : குழந்தைகள் படுகாயம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:43:00 PM (IST)

பனையூரில் 10,000 ஆண்டுகால காலப் பெட்டகம் என திகழும் புதைபடிவங்கள்: தொல்லியல் ஆர்வலர் தகவல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:12:54 PM (IST)

தூத்துக்குடியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் – ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:26:58 PM (IST)

நாசரேத் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் மனமகிழ்ச்சி விழா
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:20:23 PM (IST)

அம்பேத்கர் பிறந்தநாள்: ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:23:13 PM (IST)







