» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆத்தூர் வெற்றிலை: வரலாற்று ஆவணக் குழுவின் விழிப்புணர்வுப் புத்தகம் வெளியீடு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:14:05 AM (IST)

பொருநை நாகரிகத்தின் வாழும் அடையாளமாகவும், உலகளவில் புவிசார் குறியீடு பெற்ற பெருமைக்குரியதாகவும் விளங்கும் ஆத்தூர் வெற்றிலையின் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில், 'Roots of Porunai' ஆவணக் குழு சார்பில் சிறப்பு விழிப்புணர்வுப் புத்தகம் வெளியிடப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளாக ஆத்தூர் வெற்றிலையின் வரலாறு மற்றும் அதன் சிறப்புகள் குறித்து இக்குழுவினர் மேற்கொண்ட தொடர் களப்பணி மற்றும் ஆய்வுகளின் முதற்கட்டமாக இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆத்தூரில் நடைபெற்ற இவ்விழாவினை, 'ஆத்தூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்கம்' மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தது.
அழிந்து வரும் வெற்றிலை விவசாயிகளின் வாழ்வியலை ஆவணப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்தப் புத்தகத்தினை, மேலாத்தூர் தொழிலதிபர் சந்திரசேகர் நாடார் (உதயஸ்ரீ சபரீசன் எண்டர்பிரைசஸ் - சென்னை) அவர்கள் வெளியிட்டார். இவ்விழாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க கீழ்க்காணும் முக்கிய அறிவிப்புகளை ஆவணக் குழுவினர் வெளியிட்டனர்:
மாநில அளவிலான போட்டிகள்: பொருநை நதிக்கரை நாகரிகம் மற்றும் ஆத்தூர் வெற்றிலைக் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் விதமாக, மாநில அளவிலான பிரம்மாண்டப் புகைப்படப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
ஆவணப்படம் மற்றும் காஃபி டேபிள் புத்தகம்: பல ஆண்டு உழைப்பில் உருவான 'திரைகடல் வியந்த திரையலை தேடி' எனும் பிரம்மாண்ட ஆவணப்படத்தின் முன்னோட்டமும் (Teaser), உயர்தரக் காஃபி டேபிள் புத்தகத்திற்கான (Coffee Table Book) அறிவிப்பும் வெளியிடப்பட்டன.
கல்விக்கான புரவலர் திட்டம்: ஆத்தூர் வெற்றிலை குறித்த இந்த அறிவுப் பொக்கிஷத்தைத் தமிழகம் முழுவதும் உள்ள 8,000 பள்ளிகள் மற்றும் பொது நூலகங்களுக்கு இலவசமாகக் கொண்டு சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பிரத்யேக 'புரவலர் திட்டம்' (Patron Scheme) மற்றும் நிதி திரட்டும் முன்னெடுப்பு விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது.
நமது தொன்மையான வேளாண் மரபைக் காக்கும் இந்த அறிவுசார் முயற்சிக்குப் பொதுமக்கள், பெருநிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது பேராதரவை வழங்க வேண்டும் என 'Roots of Porunai' குழுவினர் மற்றும் விவசாய சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி: அமைச்சர் கீதா ஜீவன் வேட்புமனுத் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 12:33:35 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் வேட்புமனுத் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:59:46 AM (IST)

ஓட்டப்பிடாரத்தில் தவெக வேட்பாளர் மதன் ராஜா வேட்புமனுத் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:55:15 AM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி யாருக்கு? பலமுனை போட்டியால் வாக்குகள் சிதறும் நிலை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 10:33:25 AM (IST)

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு: அறுவடைப் பணியின்போது சோகம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 10:24:56 AM (IST)

செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனித் திருவிழா தொடக்கம்: ஏப்ரல் 13ல் தேரோட்டம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:20:49 AM (IST)







