» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: இருவர் கைது – 2 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்!

திங்கள் 16, பிப்ரவரி 2026 8:16:59 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 2 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆவுடையப்பன் தலைமையில், சார்பு ஆய்வாளர் மகராஜன் மற்றும் போலீசார் இன்று (16.02.2026) தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை சந்திப்பு அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்திப் போலீசார் சோதனை செய்தனர்.

அந்த சோதனையில், வண்டியில் வந்தவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபஸ்டின் (25) மற்றும் ஜெய் ஆனந்த் (21) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் விற்பனைக்காகத் தங்களது இருசக்கர வாகனத்தில் கஞ்சா மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, மேற்கண்ட இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப சாவு!

திங்கள் 6, ஏப்ரல் 2026 10:24:56 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory