» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆவண எழுத்தர்கள் நல நிதிய உதவித்தொகையை உயர்த்திட தமிழக முதல்வருக்கு கோரிக்கை!

திங்கள் 16, பிப்ரவரி 2026 5:21:00 PM (IST)

தமிழ்நாடு ஆவண எழுத்தர்கள் நல நிதியத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவித் தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு ஆவண எழுத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு ஆவண எழுத்தர்கள் நல நிதியக் குழுவின் உறுப்பினர் க. சிவசங்கரராமன்,விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதலமைச்சரின் சீரிய ஆட்சியில், உரிமம் பெற்ற ஆவண எழுத்தாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், கடந்த 2022-ஆம் ஆண்டு "தமிழ்நாடு ஆவண எழுத்தர்கள் நல நிதியம்" அமைக்கப்பட்டது. அரசுக்கு எவ்வித நிதிச்சுமையும் இன்றி, சுயநிதி அடிப்படையில் இந்த நிதியம் செயல்பட்டு வருகிறது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவித்தொகைகள் மிகக் குறைவாக இருப்பதால், அவற்றை தற்போதைய வாழ்வாதாரச் சூழலுக்கு ஏற்ப உயர்த்தி வழங்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே அளிக்கப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் தற்போதும் பரிசீலனையிலேயே உள்ளன. அவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

நடைபெறவுள்ள சட்டமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், விதி எண் 110-ன் கீழ் ஆவண எழுத்தர்களின் நலன் காக்கும் வகையில் முறையான அறிவிப்புகளை வெளியிட்டு, நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். ஆவண எழுத்தாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தமிழக முதல்வர் இந்தக் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory