» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்க விழா

திங்கள் 16, பிப்ரவரி 2026 5:08:18 PM (IST)



புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் "விழுதுகள்" ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்க விழா நடைபெற்றது. 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், அவர்களுக்கான அணுகல் தன்மையுடன் கூடிய ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கும் "விழுதுகள்" மையங்களைத் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள "விழுதுகள்" ஒருங்கிணைந்த சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் குத்துவிளக்கேற்றி மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தார்.

இந்த மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காகப் பல்வேறு சிறப்புப் பயிற்சிகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியருடன் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப சாவு!

திங்கள் 6, ஏப்ரல் 2026 10:24:56 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory