» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி ஆணையர் தகவல்

திங்கள் 16, பிப்ரவரி 2026 4:14:27 PM (IST)

தூத்துக்குடி மாநகருக்கான முக்கியக் குடிநீர் விநியோகப் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை (பிப்ரவரி 17) செவ்வாய்க்கிழமை மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகரின் குடிநீர் ஆதாரங்களான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கும் கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில், நாளை (17.02.2026) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

மின்வாரியத்தின் இந்தப் பராமரிப்புப் பணி காரணமாக, நாளை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். குடிநீர் விநியோகத் தடையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர்  சி. பிரியங்காகேட்டுக் கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப சாவு!

திங்கள் 6, ஏப்ரல் 2026 10:24:56 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory